எனக்குப் பிடித்த பாடல்கள் என் குரலில்...

Wednesday 28 December 2011

அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை


இது ஒரு சனித் தலம் ஆகும். மலை உச்சியில் நாயன்மார்கள்: நாயன்மார்கள் அறுபத்துமூவரின் சிலைகளை பொதுவாக பிரகாரங்களிலேயே காணமுடியும். ஆனால், இக்கோயிலில் மலை உச்சியில் சிற்பமாக வடித்துள்ளனர். நாயன்மார்கள் சிலை முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால், இங்கு ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி நடுவில் இருக்க, நாயன்மார்கள் இருபுறமும் இருப்பது சிறப்பான அம்சம். இத்தகைய அமைப்பை தமிழகத்தில் வேறெங் கும் காணமுடியாது. இங்குள்ள இறைவனை "சிகாநாதர்' என்கிறார்கள்.

சுகி சிவம் கிருபானந்தவாரியார் , தென்கச்சி சுவாமிநாதன் பேச்சை பதிவு செய்ய வேண்டுமா

அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், புதுக்கோட்டை


சித்திரை கொடி ஏற்றம் - 10 நாள் திருவிழா ஆடிப்பூசம் -11 நாள் திருவிழா புரட்டாசி - நவராத்திரி திருவிழா (அம்பு போடும் திருவிழா)- 10 நாள்

Sunday 25 December 2011

தவறான தங்க இயந்திரம் புதிர்கள்- விடைகள்



இயந்திரங்களின் பெயர் 1 2 3 4 5 6 7 8 9 10 என வைத்துக்கொள்வோம்.
முதல் இயந்திரத்திலிருந்து 1 காசு
இரண்டாம் இயந்திரத்திலிருந்து 2 காசுகள்
மூன்றாம் இயந்திரத்திலிருந்து 3 காசுகள்
.
.
.
இதுபோல ஒன்பதாம் இயந்திரத்திலிருந்து 9 காசுகள் மற்றும்
10
ஆம் இயந்திரத்திலிருந்து 10 காசுகள் எல்லாவற்றையும் ஒன்றாக நிறுத்து என்ன எடை என்று பார்க்கவும்
வரும் விடையை (10 + 20 + 30 ......+ 80 + 90 + 100) = 550லிருந்து கழிக்கவும்.
விடை 1 என்றால் முதல் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்
விடை 2 என்றால் இரண்டாம் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்
விடை 3 என்றால் மூன்றாம் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்

தவறான தங்க இயந்திரம் புதிர்கள்

பத்து இயந்திரங்கள் இருக்கின்றன. ஒன்பது இயந்திரங்கள் பத்து கிராம் எடை கொண்ட காசுகளை தயாரிக்க உதவுபவை. ஒரே இயந்திரம் மட்டும் ஒன்பது கிராம் எடை கொண்ட காசுகளை தயாரிக்கும். உங்களிடம் ஒவ்வொரு இயந்திரத்திலிருந்தும் (எல்லாவற்றுக்கும் எண் போட்டு) பத்து பத்து காசுகள் தரப்படும் . உங்களிடம் ஒரு தராசு தரப்படும். ஒரே நிறுவையில் எந்த இயந்திரம் ஒன்பது கிராம் எடை கொண்ட காசுகள் தயாரிக்கும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது

பைகள் கணக்கு, எடை கற்கள் கணக்கு விடை



1. 10 பைகளிலும் முறையே 1,2,4,8,16,32,64,128,256,489 என்று பிரித்துப் போட்டுக் கொண்டால் சரியாக இருக்கும். (Using binary system)

2.
மொத்த எடை 40 kg மற்றும் தராசின் இரண்டு பக்கங்களையும் உபயோகித்து எடை பார்க்கலாம் என்றால், உடைந்(த்)த 4 எடைக் கற்களின் எடை: 1,3,9,27 kgs
.

புதிர்கள் சில



உங்களிடம் ஆயிரம் ரூபாயும் பத்து பைகளும் இருக்கின்றன. இந்த ஆயிரம் ரூபாயை இந்தப் பைகளில் வைக்க வேண்டும். கண்டிஷன் என்னன்னா, உங்ககிட்ட எத்தனை ரூபாய் கேட்டாலும் பைகளைத் திறந்து பார்க்காமல் கொடுக்க வேண்டும், எண்ணிப் பார்த்தால் கேட்ட தொகை இருக்க வேண்டும், எப்படி? (முழு ரூபாய்களாகத் தான் கேட்கப் படும், பைசாக்கள் வரும்படி கேட்கப் பட மாட்டாது)
2.
ஒரு கடைக்காரரிடம் ஒரு எடைக் கல் இருக்கிறது.
அது நான்காக உடைந்து விட்டது. இப்படி உடைந்த கற்களை வைத்து அவரால் நாற்பது கிலோ வரை எடை பார்க்கும் வசதி இருக்கிறது என்றால், உடைந்த கற்களின் எடைகள் என்னென்ன?













விடைக்கு யோசித்து வைங்க

Friday 2 December 2011

பாடல்


கோழி    பாடல்கள்)
முட்டையிலிருந்து வரும் போது
முட்டையிலிருந்து  வரும் போது
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் உலகத்தை பார்க்கபோறேன்
நான் உலகத்தை பார்க்கபோறேன்
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
இறக்கைய ஒடிக்கும்போது (2)
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் ஏற்கேட்டிங் பண்ணிக்கிறேன்
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
மஞ்சள பூசும்போது (2)
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் மேக்கப்பு பண்ணிக்கிறேன்(2)
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
துண்டு துண்டா வெட்டும் போது(2)
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் ஆபரேசன் பண்ணிக்கிறேன்
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
எண்ணையில போடும் போது(2)
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் ஆயில் பாத் எடுத்துக்கிறேன்(2)
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் ஆராய்ச்சி பண்ணப்போறேன்
ஆராய்ச்சி பண்ணப்போறேன்
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு