Tuesday, 25 December 2012
Tuesday, 29 May 2012
நகைச்சுவை
கணவன்: ஒரு வேளை நான் செத்துட்டா நீ எதிர் வீட்டு பாலுவைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்
மனைவி: ஏன்ங்க ?
கணவன் : அவனைப் பழி வாங்க வேற வழி தெரியலடி
மனைவி.: அப்படியெல்லாம் சொல்லாதீங்க . நீங்க செத்துட்டா நானும் கூடவே செத்துடுவேன்.
கணவன் : பரமக்குடி ஜோசியர் சொன்னது சரியாதான் இருக்கு
மனைவி ; அப்படி என்னங்க சொன்னாரு ?
கணவன்: நீ செத்தாலும் சனியன் உன்னை விடாதுன்னு சொன்னாருThursday, 17 May 2012
Wednesday, 18 April 2012
Saturday, 18 February 2012
Monday, 30 January 2012
Tuesday, 17 January 2012
தெரியாத திருட்டு
“இனிமே இப்படி செய்வியா? அது என்ன பழக்கம் ?அடுத்தவங்க பொருளை எடுத்துட்டு வர்றது ? இனிமே இப்படி செஞ்ச உன்கிட்ட பேச மாட்டேன்”
புதுவித கணக்கு
யாராவது ஒருவரை அழைத்து இப்படி சொல்லுங்கள் : " நான் சொல்ற ஒரு சின்ன பெருக்கல் செய்தால் உங்க வயசு 3 தடவை ரிப்பீட் ஆகும் ! ". அவர் சரி சொன்னதும், " முதலில் உங்க வயசை 259 ஆல் பெருக்குங்க ; வரும் விடையை 39 ஆல் பெருக்குங்க " என்று சொல்லுங்கள் . கணக்கு செய்பவர், " அட, வயசு 3 தடவை ரிப்பீட் ஆயிடுச்சே " என்று அசந்துபோவார்!
Tuesday, 10 January 2012
Wednesday, 28 December 2011
அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை
இது ஒரு சனித் தலம் ஆகும். மலை உச்சியில் நாயன்மார்கள்: நாயன்மார்கள் அறுபத்துமூவரின் சிலைகளை பொதுவாக பிரகாரங்களிலேயே காணமுடியும். ஆனால், இக்கோயிலில் மலை உச்சியில் சிற்பமாக வடித்துள்ளனர். நாயன்மார்கள் சிலை முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால், இங்கு ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி நடுவில் இருக்க, நாயன்மார்கள் இருபுறமும் இருப்பது சிறப்பான அம்சம். இத்தகைய அமைப்பை தமிழகத்தில் வேறெங் கும் காணமுடியாது. இங்குள்ள இறைவனை "சிகாநாதர்' என்கிறார்கள்.
அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், புதுக்கோட்டை
சித்திரை கொடி ஏற்றம் - 10 நாள் திருவிழா ஆடிப்பூசம் -11 நாள் திருவிழா புரட்டாசி - நவராத்திரி திருவிழா (அம்பு போடும் திருவிழா)- 10 நாள்
Sunday, 25 December 2011
தவறான தங்க இயந்திரம் புதிர்கள்- விடைகள்
முதல் இயந்திரத்திலிருந்து 1 காசு
இரண்டாம் இயந்திரத்திலிருந்து 2 காசுகள்
மூன்றாம் இயந்திரத்திலிருந்து 3 காசுகள்
.
.
.
இதுபோல ஒன்பதாம் இயந்திரத்திலிருந்து 9 காசுகள் மற்றும்
10ஆம் இயந்திரத்திலிருந்து 10 காசுகள் எல்லாவற்றையும் ஒன்றாக நிறுத்து என்ன எடை என்று பார்க்கவும்
வரும் விடையை (10 + 20 + 30 ......+ 80 + 90 + 100) = 550லிருந்து கழிக்கவும்.
விடை 1 என்றால் முதல் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்
விடை 2 என்றால் இரண்டாம் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்
விடை 3 என்றால் மூன்றாம் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்
தவறான தங்க இயந்திரம் புதிர்கள்
பத்து இயந்திரங்கள் இருக்கின்றன. ஒன்பது இயந்திரங்கள் பத்து கிராம் எடை கொண்ட காசுகளை தயாரிக்க உதவுபவை. ஒரே இயந்திரம் மட்டும் ஒன்பது கிராம் எடை கொண்ட காசுகளை தயாரிக்கும். உங்களிடம் ஒவ்வொரு இயந்திரத்திலிருந்தும் (எல்லாவற்றுக்கும் எண் போட்டு) பத்து பத்து காசுகள் தரப்படும் . உங்களிடம் ஒரு தராசு தரப்படும். ஒரே நிறுவையில் எந்த இயந்திரம் ஒன்பது கிராம் எடை கொண்ட காசுகள் தயாரிக்கும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது
பைகள் கணக்கு, எடை கற்கள் கணக்கு விடை
1. 10 பைகளிலும் முறையே 1,2,4,8,16,32,64,128,256,489 என்று பிரித்துப் போட்டுக் கொண்டால் சரியாக இருக்கும். (Using binary system)
2.மொத்த எடை 40 kg மற்றும் தராசின் இரண்டு பக்கங்களையும் உபயோகித்து எடை பார்க்கலாம் என்றால், உடைந்(த்)த 4 எடைக் கற்களின் எடை: 1,3,9,27 kgs
2.மொத்த எடை 40 kg மற்றும் தராசின் இரண்டு பக்கங்களையும் உபயோகித்து எடை பார்க்கலாம் என்றால், உடைந்(த்)த 4 எடைக் கற்களின் எடை: 1,3,9,27 kgs
.
புதிர்கள் சில
2. ஒரு கடைக்காரரிடம் ஒரு எடைக் கல் இருக்கிறது.
அது நான்காக உடைந்து விட்டது. இப்படி உடைந்த கற்களை வைத்து அவரால் நாற்பது கிலோ வரை எடை பார்க்கும் வசதி இருக்கிறது என்றால், உடைந்த கற்களின் எடைகள் என்னென்ன?
விடைக்கு யோசித்து வைங்க
Sunday, 4 December 2011
Friday, 2 December 2011
பாடல்
கோழி பாடல்கள்)
முட்டையிலிருந்து வரும் போது
முட்டையிலிருந்து வரும் போது
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் உலகத்தை பார்க்கபோறேன்
நான் உலகத்தை பார்க்கபோறேன்
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
இறக்கைய ஒடிக்கும்போது (2)
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் ஏற்கேட்டிங் பண்ணிக்கிறேன்
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
மஞ்சள பூசும்போது (2)
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் மேக்கப்பு பண்ணிக்கிறேன்(2)
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
துண்டு துண்டா வெட்டும் போது(2)
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் ஆபரேசன் பண்ணிக்கிறேன்
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
எண்ணையில போடும் போது(2)
என்னதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் ஆயில் பாத் எடுத்துக்கிறேன்(2)
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
நான் ஆராய்ச்சி பண்ணப்போறேன்
ஆராய்ச்சி பண்ணப்போறேன்
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
என்றுதான் சொன்னுச்சாம் கோழிக்குஞ்சு
Subscribe to:
Posts (Atom)
