எனக்குப் பிடித்த பாடல்கள் என் குரலில்...
Showing posts with label புதிர்கள். Show all posts
Showing posts with label புதிர்கள். Show all posts

Sunday, 25 December 2011

தவறான தங்க இயந்திரம் புதிர்கள்

பத்து இயந்திரங்கள் இருக்கின்றன. ஒன்பது இயந்திரங்கள் பத்து கிராம் எடை கொண்ட காசுகளை தயாரிக்க உதவுபவை. ஒரே இயந்திரம் மட்டும் ஒன்பது கிராம் எடை கொண்ட காசுகளை தயாரிக்கும். உங்களிடம் ஒவ்வொரு இயந்திரத்திலிருந்தும் (எல்லாவற்றுக்கும் எண் போட்டு) பத்து பத்து காசுகள் தரப்படும் . உங்களிடம் ஒரு தராசு தரப்படும். ஒரே நிறுவையில் எந்த இயந்திரம் ஒன்பது கிராம் எடை கொண்ட காசுகள் தயாரிக்கும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது

புதிர்கள் சில



உங்களிடம் ஆயிரம் ரூபாயும் பத்து பைகளும் இருக்கின்றன. இந்த ஆயிரம் ரூபாயை இந்தப் பைகளில் வைக்க வேண்டும். கண்டிஷன் என்னன்னா, உங்ககிட்ட எத்தனை ரூபாய் கேட்டாலும் பைகளைத் திறந்து பார்க்காமல் கொடுக்க வேண்டும், எண்ணிப் பார்த்தால் கேட்ட தொகை இருக்க வேண்டும், எப்படி? (முழு ரூபாய்களாகத் தான் கேட்கப் படும், பைசாக்கள் வரும்படி கேட்கப் பட மாட்டாது)
2.
ஒரு கடைக்காரரிடம் ஒரு எடைக் கல் இருக்கிறது.
அது நான்காக உடைந்து விட்டது. இப்படி உடைந்த கற்களை வைத்து அவரால் நாற்பது கிலோ வரை எடை பார்க்கும் வசதி இருக்கிறது என்றால், உடைந்த கற்களின் எடைகள் என்னென்ன?













விடைக்கு யோசித்து வைங்க