எனக்குப் பிடித்த பாடல்கள் என் குரலில்...

Tuesday, 1 September 2015

ஆங்கிலம்

ஒரு வாசகர் தன்னுடைய கடிதத்தில் Even Homer Nods என்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி என்றால் என்ன?
ஹோமர் என்பவர் கிரேக்க நாட்டில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் பிரபலமான கவிஞர். காவியங்களாகக் கருதப்படும் இலியட், ஒடிஸி போன்றவற்றை எழுதியவர். ஹொரேஸ் என்பவர் ஹோமரின் நூலில் ஒரு தவறைக் கண்டுபிடித்தார். கொலை செய்யப்பட்ட ஒரு கதாபாத்திரம் பின்னொரு பகுதியில் உயிரோடு இருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. இதுபற்றிக் குறிப்பிடும்போது லத்தீனில் ஒரு வாக்கியத்தை வெளிப்படுத்தினார் ஹொரேஸ். அதன் பொருள் ‘மகாகனம் பொருந்திய ஹோமர் கூட தலையசைக்கிறார்’ என்பது. இங்கே தலை அசைவு என்பது தூங்கிவிழும் தலையை குறிக்கிறது. ‘யானைக்கும் அடி சறுக்கும்’ எனும் தமிழ் பழமொழியின் பொருளில் பொதுவாக இது பயன்படுத்தப்படுகிறது.
கீழே சில ஆங்கிலப் பழமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான தமிழ்ப் பழமொழிகளை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

Sunday, 26 July 2015

ஆங்கிலம் அறிவோமா?

இரண்டு வாசகர்கள் “Each, every ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம்தானா?’’ என்று ஒரே வினாவை ஒரே வாரத்தில் எழுப்பியிருக்கிறார்கள்.
‘‘வரும் ... ஆனா வராது’’ என்பதுபோல “ஒன்றுதான் ... ஆனால் ஒன்றே இல்லை” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
பொதுவாக, இரண்டு பேர் இருக்கும்போது நாம் each என்ற வார்த்தையையும் (each one of you என்பதைவிட each of you என்பதைப் பயன்படுத்துங்கள்), இருவருக்கு மேல் இருந்தால் every என்ற வார்த்தையை (every one of you) பயன்படுத்துவோம்.
இந்த இரண்டில் every என்பது மேலும் வலுவானது. ‘எந்த ஒரு விதிவிலக்கும் இல்லாமல்’ என்பதை இது குறிக்கிறது. சிலர் அழுத்தந்திருத்தமாக ‘each and

இந்த வார ஆங்கிலம்

சில வாரங்களுக்கு முன் cliche என்ற வார்த்தை குறித்து குறிப்பிட்டிருந்தேன். இதன் தொடர்ச்சியாக ‘clique’ என்ற வார்த்தையின் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார் ஒருவர். கூடவே அது புகைப்படம் எடுக்கும்போது எழும் ஒலியைத்தானே குறிக்கிறது என்றும் கேட்டிருக்கிறார்.
கேமராவில் எழும் ஒலி, மூளையில் திடீரென்று பல்பு எரிவது போ

Tuesday, 29 May 2012

நகைச்சுவை

கணவன்:                       ஒரு வேளை நான்  செத்துட்டா நீ எதிர் வீட்டு பாலுவைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும் 
மனைவி:              ஏன்ங்க ?
 கணவன் :          அவனைப் பழி  வாங்க வேற வழி தெரியலடி
மனைவி.:            அப்படியெல்லாம்    சொல்லாதீங்க . நீங்க செத்துட்டா நானும்   கூடவே செத்துடுவேன்.
கணவன் :                        பரமக்குடி    ஜோசியர் சொன்னது   சரியாதான் இருக்கு
மனைவி ;                             அப்படி என்னங்க சொன்னாரு ?
கணவன்:                              நீ  செத்தாலும்  சனியன் உன்னை விடாதுன்னு  சொன்னாரு

Monday, 30 January 2012

Tuesday, 17 January 2012

தெரியாத திருட்டு


“இனிமே இப்படி செய்வியா? அது என்ன பழக்கம் ?அடுத்தவங்க பொருளை எடுத்துட்டு வர்றது ? இனிமே இப்படி செஞ்ச உன்கிட்ட பேச மாட்டேன்”

ஒரு   வரிக் கதை


இன்று  எப்படியாவது தோட்டத்து மரத்தை வெட்டி சாய்த்து விட வேண்டும்

புதுவித கணக்கு

யாராவது ஒருவரை அழைத்து இப்படி சொல்லுங்கள் : " நான் சொல்ற ஒரு சின்ன பெருக்கல் செய்தால் உங்க வயசு 3 தடவை ரிப்பீட் ஆகும் ! ". அவர் சரி சொன்னதும், " முதலில் உங்க வயசை 259 ஆல் பெருக்குங்க ; வரும் விடையை 39 ஆல் பெருக்குங்க " என்று சொல்லுங்கள் . கணக்கு செய்பவர், " அட, வயசு 3 தடவை ரிப்பீட் ஆயிடுச்சே " என்று அசந்துபோவார்!

Wednesday, 28 December 2011

அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை


இது ஒரு சனித் தலம் ஆகும். மலை உச்சியில் நாயன்மார்கள்: நாயன்மார்கள் அறுபத்துமூவரின் சிலைகளை பொதுவாக பிரகாரங்களிலேயே காணமுடியும். ஆனால், இக்கோயிலில் மலை உச்சியில் சிற்பமாக வடித்துள்ளனர். நாயன்மார்கள் சிலை முடியும் இடத்தில் விநாயகர் சிலை வைப்பது மரபு. ஆனால், இங்கு ரிஷபத்தில் அமர்ந்த சிவபார்வதி நடுவில் இருக்க, நாயன்மார்கள் இருபுறமும் இருப்பது சிறப்பான அம்சம். இத்தகைய அமைப்பை தமிழகத்தில் வேறெங் கும் காணமுடியாது. இங்குள்ள இறைவனை "சிகாநாதர்' என்கிறார்கள்.

சுகி சிவம் கிருபானந்தவாரியார் , தென்கச்சி சுவாமிநாதன் பேச்சை பதிவு செய்ய வேண்டுமா

அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், புதுக்கோட்டை


சித்திரை கொடி ஏற்றம் - 10 நாள் திருவிழா ஆடிப்பூசம் -11 நாள் திருவிழா புரட்டாசி - நவராத்திரி திருவிழா (அம்பு போடும் திருவிழா)- 10 நாள்

Sunday, 25 December 2011

தவறான தங்க இயந்திரம் புதிர்கள்- விடைகள்



இயந்திரங்களின் பெயர் 1 2 3 4 5 6 7 8 9 10 என வைத்துக்கொள்வோம்.
முதல் இயந்திரத்திலிருந்து 1 காசு
இரண்டாம் இயந்திரத்திலிருந்து 2 காசுகள்
மூன்றாம் இயந்திரத்திலிருந்து 3 காசுகள்
.
.
.
இதுபோல ஒன்பதாம் இயந்திரத்திலிருந்து 9 காசுகள் மற்றும்
10
ஆம் இயந்திரத்திலிருந்து 10 காசுகள் எல்லாவற்றையும் ஒன்றாக நிறுத்து என்ன எடை என்று பார்க்கவும்
வரும் விடையை (10 + 20 + 30 ......+ 80 + 90 + 100) = 550லிருந்து கழிக்கவும்.
விடை 1 என்றால் முதல் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்
விடை 2 என்றால் இரண்டாம் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்
விடை 3 என்றால் மூன்றாம் இயந்திரம்தான் 9 கிராம் எடை காசுகளைத் தயாரிக்கும்